வியாழன், 8 டிசம்பர், 2016

முழுவதுமாக பாஜகவின் (முதலை) வாய்க்குள் விழுந்துவிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டாலும், ஜெ. இல்லாத அ.தி.மு.க.வை தன் இஷ்டப்படி ஆட்டி வைக்க மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது என்று ஒரு தரப்பும், சசிகலாவின் சட்டத்துக்குப் புறம்பான அதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என இன்னொரு தரப்பும் அனல் கிளப்புகிறது.
""ஜெ. உடல்நலன் பற்றிய அறிவிப்பினால் சென்னைக்கு அவசரமாக திரும்பிய கவர்னரை, தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், ஷீலாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்தனர். அந்த சந்திப்பிலேயே, நடந்த வற்றைத் தெரிந்துகொண்டுதான் அப்பல்லோவுக்கே சென்றிருக்கிறார் கவர்னர்.
இந்த நிலையில், 5-ந்தேதி காலையில் ராமமோகனராவை வரவழைத்து விவாதித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், ""ஆளும் கட்சியின் சட்டமன்ற தலைவரை புதிதாக தேர்ந்தெடுத்து இன்றைக்குள் தெரிவிக்க வலியுறுத்துங்கள்'' என தெரிவித்துள்ளார் கவர்னர். இதனையடுத்து 8 மணிக்கு அப்பல்லோ வுக்கு வந்தார் தலைமைச்செயலாளர். அப்போது மருத்துவமனையில் இருந்த டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர், ராமமோகனராவோடு இணைந்துகொள்ள, அவர்கள் சசிகலாவை சந்தித்தனர். அதேசமயம், அமைச்சர்கள் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கவர்னர் அழுத்தமாக சொல்லியனுப்பிய தகவலை சசிகலாவிடம் தெரிவித் தார் தலைமைச்செயலாளர்.


இறுக்கமானார் சசிகலா. சில நிமிடங்கள் கழிந்த நிலையில், ""எம்.எல்.ஏ.க் களை 11 மணிக்கு வரச்சொல்லியிருக் கிறோம். அதில் முடிவெடுக்க வேண்டியதுதான்'' என தெரிவிக் கிறார் சசிகலா. பிறகு ஓ.பி. எஸ்.ஸை பார்த்து, ""நீங்கள்தான்'' என இறுக்கமான மனநிலையில் சொல்லியிருக் கிறார். அப்போது ஓ.பி.எஸ்., ""உங்க ளுக்கு விசுவாசமாக இருப்பேன் அம்மா'' என தழுதழுக்க சொல்லியிருக்கிறார். அதனையடுத்து, அமைச் சர்களும், அதிகாரிகளும் வெளியேறினர்.

11 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோவில் குவிந் தார்கள். அவர்களிடம், ""ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றுமையாக இருக்கிறோம். சட்டமன்றக் குழுத் தலைவராக ஓ.பி.எஸ்.ஸை தேர்ந்தெடுத்துள்ளோம்'' என்கிற கடிதத்தில் அனை வரிடமும் கையெழுத்துப் பெறப்பட்டது. ஓ.பி.எஸ்.ஸை தேர்வு செய்ததில் எம்.எல்.ஏ.க்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை அறிந்து, "இது தற்காலிக ஏற்பாடுதான்... ஒப்புக்கொள்ளுங்கள்' என சசிகலா தரப்பின் சார்பில் மதுசூதனன், எம்.எல்.ஏ.க் களிடம் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடப்பட்டது'' என்கிறார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.

அப்பல்லோவில் சசிகலா சொந்தங்களான திவாகரன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் அங்கு வந்த ஓ.பி.எஸ்.ஸிடம் வார்த்தை களால் கடிந்து கொண்டனர். பிறகு 6 மணியளவில் தலைமைக் கழகத்தில் அதிகாரப்பூர்வ எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முறைப்படி தேர்வு செய்வது என முடிவானது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், ஆட்சி நிர்வாகத்துக்கு ஓ.பி.எஸ். என்றும் தீர்மானிக்கப் பட்டது. சசிகலாவிடம் ஓ.பி.எஸ். பவ்யமாக, ""எனக்கு ஆட்சியை விட கட்சிப்பதவிதான் பெருமை. அம்மாவிடம் இருந்ததுபோல, சின்னம்மாவிடம் துணைப் பொதுச் செயலாளராக இருக்க விரும்பு கிறேன்'' என்றிருக்கிறார்.

ஆனால் சசிகலா பிடிகொடுக்கவில்லை. மாலை 6 மணிக்கு முன்பாக ஜெ. காலமானார் என ஊடகங்கள் பரபரப்பு கிளப்ப, அதன் காரணமாக தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க. கொடி அரைக்கம்பத்திற்கு இறக்கப் பட்டது. பிறகு அது தவறான தகவல் எனத் தெரியவர, மீண்டும் கொடி உயர்ந்தது. இந்த களேபரத்திற் கிடையே அப்பல்லோவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்ததால் சசிகலா தரப்பின் கவனம் அங்கே திரும்பியது. மாலை 4 மணிக்கெல்லாம் அப்பல்லோ வந்து விட்டார் சசிகலா வின் கணவர் நடராஜன். ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்கக் கூடாது என நடராஜனும் தினகரனும் கடுமையான எதிர்ப்பு காட்டினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து அழுத்தமாய் பேசினார் ஓ.பி.எஸ். ஓ.பி.எஸ்.ஸுக்கு மீண்டும் மீண்டும் முதல்வர் பதவி தருவதில் சசிகலா தரப்புக்கு விருப்பமில்லை. அவரை விட எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதால் அவரைப் பரிந்துரைத்தனர். ஆனால் டெல்லியின் ஆதரவும் நிர்பந்தமும் ஓ.பி.எஸ்.சுக்கு சாதக மாகவே இருந்தது.

முக்குலத்தோரான ஓ.பி.எஸ்.ஸையே மீண்டும் முதல்வராக்குவதற்கு பதில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியான கவுண்டர் சமுதாயத்தை முன்னிறுத்தும் வகையில் பா.ஜ.க. அரசுடன் இணக்கமானவரான தம்பிதுரையை முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பல்லோவுக்கு வெங்கையா நாயுடு வந்தபோது அவர் மூலம் இதனை பிரதமர் தரப்பிடம் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ்.தான் ஒரே சாய்ஸ் என பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

டெல்லியில் ஓ.பி.எஸ். செல்வாக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கரூர் அன்புநாதன் விவகாரம், திருப்பூர் கண்டெய்னர் விவகாரம் ஆகியவை மத்தியஅரசின் பிடியில் உள்ளன. இந்தப் பின்னணியில் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டியவராகவும், சசிகலா தரப்பு அந்நியமாகவும் உள்ளது.

ஓ.பி.எஸ்.ஸுக்கு மணல் அதிபர் சேகர் ரெட்டி மூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நெருக்கம் அதிகமாகியுள்ளது. அடிக்கடி ஓ.பி.எஸ். திருப்பதி பக்கம் சென்று வருவதும் இந்த நெருக்கத் தில்தான். அது அப்படியே டெல்லி வரையிலும் ஓ.பி. எஸ்.ஸுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியில் சசிகலா தரப்பின் தலை யீடுகள் குறித்து ஓ.பி.எஸ்ஸிடமே தகவல் பெறும் நிலையில் உள்ளதாம் டெல்லி.

துறையூர் தோட்டா தொழிற்சாலை வெடிவிபத்து தொடர்பான நிவாரண நிதி அறிக்கையில் "முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க' என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. "அதிகாரங்கள் ஓ.பி.எஸ்.ஸிடம் தரப்பட்ட நிலையில், தொடர்ந்து ஜெ. உத்தரவுப்படி என அறிக்கைகள் வருவது ஏன்' என டெல்லி கேட்டுள்ளது. அதற்கு ஓ.பி.எஸ்., “"சட்டப்படி எனக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தாலும் நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை' எனத் தெரிவித்தாராம். சசிகலா வசம்தான் அதிகாரம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட டெல்லி, அதனைத் தடுக்க திட்டம் வகுத்துள்ளது.

ஜெ. உடல்நிலை மீது அதிகாரம் அப்பல்லோவில் ஜெ. அனுமதிக்கப்பட்டதி லிருந்தே நிஜ ரிப்போர்ட்டை பெற்று வந்தது மத்திய அரசு. ஜெ. பழைய நிலைக்கு வரும் வாய்ப்பில்லை என்பது தெரிந்திருந்ததால், சசிகலா தரப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்கி, அ.தி.மு.க.வை ஆட்டிவைக்கும் வியூகத்தை பா.ஜ.க வகுத்தது.

ஜெ. உடல்நிலை குறித்த உண்மைத் தகவல்களை அப்பல்லோ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற நெருக்கடியை மத்திய அரசு கொடுத்ததன் விளைவாக, "ஜெ. தன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் ஆகுமளவு பரிபூரணமாக நலம் பெற்றுள்ளார்' என்று சொல்லி வந்த அப்பல்லோ நிர்வாகம் திடீரென டிசம்பர் 4 மாலையில் "ஜெ.வுக்கு கார்டியாக் அரெஸ்ட்' எனத் தெரிவித்தது-.அவர் சீரியஸாக இருக்கிறார் என்பது வெளிப்பட்ட நிலையில், "அவரது மரணம் தொடர்பான அறிவிப்பை சட்டப்படி ஆளுநர்தான் அறிவிக்க வேண்டும். நீங்கள் இதில் அதிகாரம் செலுத்தினால் கிரிமினல் சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என சசிகலா தரப்பை டெல்லி எச்சரித்துள்ளது.

 மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பிய ரிப்போர்ட் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த உண்மைத்தகவல்களை அறிந்து வைத்திருந்தது பிரதமர் அலுவலகம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பகிர்ந்திருந்தார் பிரதமர் மோடி. இந்தநிலையில், மும்பையிலிருந்த தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவிடம், ""ஜெயலலிதாவின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. சென்னைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து விட்டு ரிப்போர்ட் அனுப்புமாறு உத்தரவிட்டது பிரதமர் அலுவலகம். உடனே, சிறப்பு விமானத்தில் அவசரம் அவசரமாக சென்னை திரும்பிய கவர்னர், இரவு 11.45-க்கு அப்பல்லோவுக்குள் நுழைந்தார். மருத்துவமனை உரிமையாளர் ரெட்டியை சந்தித்துவிட்டு 20 நிமிடத்தில் அங்கிருந்து வெளியேறினார் கவர்னர்.

இதற்கு முன்பு 2 முறை அப்பல்லோவுக்கு விசிட் அடித்திருந்த கவர்னர், ஜெ. அட்மிட்டாகியிருந்த வார்டுக்கு சென்றுவிட்டே திரும்பியிருந்தார். ஆனால், இந்த முறை வார்டுக்கு செல்லவில்லை. எவ்வளவு வேகமாக அப்பல்லோவுக்குள் சென்றாரோ அதே வேகத்தில் ராஜ்பவன் திரும்பிய கவர்னர், ஜெ.வின் உடல்நலம் குறித்த ரிப்போர்ட் டை தயாரித்து நள்ளிரவு 2 மணிக்கு டெல்லிக்கு அனுப்பினார்.

கவர்னரின் ரிப்போர்ட் குறித்து விசாரித்தபோது, "" முதல்வரின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகபட்சம் 48 மணி நேரம்தான் எனவும் உயரிய சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டன. இனி எங்கள் கையில் எதுவும் இல்லை என்றும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார் கவர்னர்'' என்கிறார்கள் ராஜ்பவன் அதிகாரிகள்.

இந்த ரிப்போர்ட்டைப் பெற்ற பிரதமர் அலுவலகம், அதனை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தது. இதனைத்தொடர்ந்து, கவர்னரைத் தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கவனிக்குமாறும் தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையை மத்திய அரசு அனுப்பி வைக்கும் என்று தெரிவித்தார்.

அதே நேரம், தமிழக டி.ஜி.பி.க்கு சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஸ்ட்ரிக்டான சில உத்தரவுகளைப் பிறப்பித்தது மத்திய உள்துறை. மாநிலத்திற்கான அமைச்சரவை இருந்தபோதும் ஜெ. மரணம் வரையிலான கடைசி நேர செய்தித் தொடர்புகளை பொறுப்பு கவர்னர் மூலமே மேற்கொண்டது மத்திய அரசு. இது அரசியல் சாசனத்திற்கும் மாநில சுயாட்சி உரிமைக்கும் எதிரானது எனத் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர் கள். ஆனால் அது பற்றி கவலைப் படாமல் மத்திய அரசு செயல்பட, டிசம்பர் 5-ந் தேதி இரவில் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பா.ஜ.க மேலிடத்தின் விருப்பப்படி ஓ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின் கவர்னர் மாளிகை சென்று, மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றார் ஓ.பி.எஸ். அவருடன் அமைச்சரவை சகாக்களும் பதவி ஏற்றனர். கடந்த முறை முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ்.ஸும் மற்றவர்களும் அழுதபடியே பதவிப் பிரமாணம் ஏற்றனர். ஆனால் ஜெ. இறந்த நிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் எவ்வித அழுகையும் இல்லை. மத்திய அரசின் மாநில ஆட்சி மீதான ஆதிக்கம் இனி வரும் நாட்களில் இன்னும் தீவிரமாகும் என்கிறார்கள் ஜெ.வை இழந்த அ.தி.மு.க நிர்வாகிகள். -இரா.இளையசெல்வன் படங்கள் : ஸ்டாலின், அசோக்-இரா.இளையசெல்வன்</">படங்கள் : ஸ்டாலின், அசோக்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: