புதன், 7 டிசம்பர், 2016

ஜெ.வை. யார் கண்ணிலும் காட்டாமல் இப்படி அடைத்து அனுப்பி விட்டார்களே.. டிராபிக் ராமசாமி


Traffic Ramasamy questions the death of Jayalalitha சென்னை: தூக்குத் தண்டனைக் கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள்.இங்கு அது கூட நடந்ததா என்பது சந்தேகமே. ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டாமல், ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டாமல்... இப்படி ஒரு ஜீவனை அடைத்து வைத்து அனுப்பி வைத்துவிட்டார்களே என்று சமூக சேவகரும், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவருமான டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு: தூக்குத் தண்டனைக் கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள்.
இங்கு அது கூட நடந்ததா என்பது சந்தேகமே.
ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டாமல், ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டாமல்... இப்படி ஒரு ஜீவனை அடைத்து வைத்து அனுப்பி வைத்துவிட்டார்களே. மரணத்தில் கூட கண்ணியத்தைக் காட்டாமல் எப்போது இறந்தார் என்பதில் கூட குளறுபடி செய்யவேண்டிய சுய நல மனிதர்கள் தான் அவரைச் சுற்றிலும் இருந்திருக்கிறார்கள் போலும்.
மொத்தத்தில், ஜெயலலிதா என்னும் " அடிமைப் பெண்", ஐந்துமுறை நாட்டை ஆண்டாலும், இறுதி வரை தனக்கு விருப்பம் இல்லாத வாழ்வைத்தான் பாவம் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.
மரணத்தின் மூலம், விட்டு விடுதலையாகி....! tamiloneindia.com

கருத்துகள் இல்லை: