மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவரின் அண்ணன் மகள் தீபா கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார்.
அவரின் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடியுள்ளனர். இன்று மாலை 4.30 மணியளவில் மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜெ.வின் உடலுக்கு அவரது அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினார்.
இதற்கு முன், அவர் போயாஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்திக்க முயன்ற போதும், ஜெ. உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதும், ஜெ.வை சந்தித்து பேச தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், நேற்று ஜெ.வின் இறுதிச் சடங்குகள் போயஸ் கார்டனில் செய்யப்பட்ட போதும், அங்கு சென்ற தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மோடி அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பின், தீபா அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுடன் ஒருவராக வரிசையில் நின்ற தீபா, ஒரு சில நொடிகள் மட்டும் நின்று அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவரின் அண்ணன் மகள் தீபா கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக