மாலை 4 மணியுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தப்பட்டு, கண்ணாடிப்பெட்டியில் மூடி பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் பூத உடல் ஏற்றப்பட்டு அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனுப்பினர். நல்லடக்கம் செய்வதற்கு முன்பாக முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.
சந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் , ஆளுநர், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல்காந்தி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதியாக ஜெயலலிதா உடலுக்கு அவரது குல பாரம்பரிய முறைப்படி இறுதி சம்பிரதாயங்கள் நடைபெற்றன. ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபக், தனது அத்தைக்கு சசிகலா உடன் இணைந்து இறுதி சடங்குகளை செய்தார்.
அவர்தான் இன்று இறுதி சடங்கு செய்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக