வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்
இரண்டாம் நாளான இன்று, அவரது சமாதிக்கு உறவினரான தீபா, பால்,பூ முதலிய பொருட்களுடன் அஞ்சலி செலுத்த வந்தார்.அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தீபாவைக் கண்ட பொதுமக்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.அதனால் அங்கு கூட்டம் ஏற்பட்டது. பின்னர், போலீஸார் துணையுடன் தீபா பத்திரமாக கிளம்பிச் சென்றார். முகநூல் பதிவு உமா

கருத்துகள் இல்லை: