சென்னை: ''காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் பங்களா அருகே லாரிகள்
நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
புகாரில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:சென்னை,
சிறுதாவூரில் பங்களா அருகே கன்டெய்னர் லாரிகள்
நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பாக, எதிர்க்கட்சிகளிடம் இருந்து
புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
விசாரணையில், புகார்மீது உண்மை இருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். நடப்பது ராமராஜ்ஜியம் குற்றவாளிகள் கூட சுகமாக தப்பிவிட வாய்ப்பு அளிக்கப்படுமல.. தேடிபோனோம் அண்ணே பயபுள்ள ஓடிட்டாய்ன்...இதுதானே பதில்,
நாமக்கல், தென்னந்தோப்பில் பண மூட்டை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து, மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்துள்ளார்.
திருச்சி அடுத்த பொன்மலைப் பகுதியில், வங்கிக் காசோலைகள் சிதறிகிடந்தது குறித்தும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில், அரசியல்வாதிகளின் கூட்டம் நடப்பதாக புகார் வந்துள்ளது. அவ்வாறு நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.உரிமம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களுக்கு தற்போது உரிமம் வழங்கப்படுவதாகவும் புகார் வந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. புதிதாக உரிமம் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறு.இவ்வாறு அவர் தெரிவித்தார்.dinamalr.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக