வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை சவுந்தரராஜன்
செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கூட்டணிக்காக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து உள்ளேன். கூட்டணியில் உள்ள கட்சியை மிக மோசமாக சித்தரிக்க வைகோவால்தான் முடியும்.
விஜயகாந்த் எவ்வளவு நம்பிக்கை வைத்து உங்களுடன் சேர்ந்து உள்ளார். அதை நீங்கள் கொச்சைப்படுவதாக உள்ளது. செய்தியாளர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வைகோ வெளிநடப்பு செய்கிறார். செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும். பாரதீய ஜனதா கட்சியின் தலைமையை ஏற்று தேர்தலை சந்திக்க விரும்புகிறவர்கள் வரலாம் என சொல்லி இருக்கிறோம். ஊழலுக்கு எதிராக போராடுவதால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தன்மையுடன் தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க.வுக்கு நேரிடையான சவாலாக பாரதீய ஜனதா கட்சி இருக்கும். மற்ற கட்சிகள் சவாலாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.v nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக