விஜயகாந்த் திமுக பக்கம் காட்டிய நெருக்கத்தை பார்த்து தான் தேமுதிக கட்சியினர் தேர்தலில் போட்டியிட இந்த அளவுக்கு விருப்பமனு அளித்தனர். தேர்தல் செலவுக்கு பல லட்சங்களையும் அளித்தனர்.<ஆனால் தனித்து போட்டி என்ற அறிவிப்பால், விருப்பமனு அளித்து, பல லட்சங்களை கட்டியவர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்படி சொந்த கட்சியினரையே நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார் விஜயகாந்த் என பணம் கட்டிய பலர் புலம்பி வருகின்றனர். விஜயகாந்த் கட்சியினர் தேர்தலில் போட்டியிட கிட்டத்தட்ட 4000 பேர் விருப்பமனு அளித்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் பலத்தை மட்டுமே நம்பி விருப்பமனு அளிக்கவில்லை, திமுக கூட்டணியில் விஜயகாந்த் செல்வார், திமுகவின் துணையோடு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தான் விருப்பமனு அளித்தனர் என்பதே நிதர்சனமான உண்மை.விஜயகாந்தின் இந்த தனித்து போட்டி என்ற முடிவால் அவரது கட்சியின் பல நிர்வாகிகள் கட்சி தாவ கூட தயாராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பல மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை தங்கள் பக்கம் இழுக்க சூரிய கட்சி முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஒட்டுமொத்த கட்சியினரின் விருப்பத்திற்கும் மாறாக முடிவெடுத்து தன் கட்சி உடைவதற்கு தானே வழிவகுத்துள்ளார் விஜயகாந்த். வெப்துனியா.com
திங்கள், 28 மார்ச், 2016
தேமுதிக உடைகிறது?: தொண்டர்களை உசுப்பேற்றி கடலில் தள்ளிய விஜயகாந்த்....போட்டி பொதுக்குழு ஆயத்தம்?
விஜயகாந்த் திமுக பக்கம் காட்டிய நெருக்கத்தை பார்த்து தான் தேமுதிக கட்சியினர் தேர்தலில் போட்டியிட இந்த அளவுக்கு விருப்பமனு அளித்தனர். தேர்தல் செலவுக்கு பல லட்சங்களையும் அளித்தனர்.<ஆனால் தனித்து போட்டி என்ற அறிவிப்பால், விருப்பமனு அளித்து, பல லட்சங்களை கட்டியவர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்படி சொந்த கட்சியினரையே நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார் விஜயகாந்த் என பணம் கட்டிய பலர் புலம்பி வருகின்றனர். விஜயகாந்த் கட்சியினர் தேர்தலில் போட்டியிட கிட்டத்தட்ட 4000 பேர் விருப்பமனு அளித்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் பலத்தை மட்டுமே நம்பி விருப்பமனு அளிக்கவில்லை, திமுக கூட்டணியில் விஜயகாந்த் செல்வார், திமுகவின் துணையோடு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தான் விருப்பமனு அளித்தனர் என்பதே நிதர்சனமான உண்மை.விஜயகாந்தின் இந்த தனித்து போட்டி என்ற முடிவால் அவரது கட்சியின் பல நிர்வாகிகள் கட்சி தாவ கூட தயாராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பல மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை தங்கள் பக்கம் இழுக்க சூரிய கட்சி முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஒட்டுமொத்த கட்சியினரின் விருப்பத்திற்கும் மாறாக முடிவெடுத்து தன் கட்சி உடைவதற்கு தானே வழிவகுத்துள்ளார் விஜயகாந்த். வெப்துனியா.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக