பிரபல தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா பானர்ஜி மும்பையில் தூக்கு போட்டு
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பான 'பாலிகா வாது' தொலைகாட்சி தொடரில், ஆனந்தி
கதாபாத்திரத்தில் அறிமுகமான பிரதியுஷா பானர்ஜி, குறுகிய காலத்தில்
பலருக்கும் அபிமான நடிகையாக மாறியுள்ளார். இவர் மேலும் பல தொலைக்காட்சி
தொடர்களில் தற்போது நடித்து வந்தார்.
இந்திய சின்னத்திரை நடிகைகளில் கவர்ச்சிகரமான பெண் நடிகைகள் பலர் உள்ளனர்.
அதில் துணிச்சலாக கவர்ச்சியாக
நடிக்கும் டாப்10 இந்திய டிவி நடிகைகள் பட்டியலில் பிரதியுஷா இடம்
பெற்றிருந்தார். பிரதியுஷாவின் பல சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு
ஒளிபரப்பாகி வருகிறது.
வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய பிரதியுஷா பானர்ஜியை
அவரது உறவினர்கள் மும்பையின் பிரபல மருத்துவமனையான கோகிலாபென்
மருத்துவமனையில் அனுமதித்தார் என்றும் அவர் இறந்து விட்டதாக
மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டதாக வட இந்திய ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.
மும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து
வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா 24. இவர் ‘பாலிகா வாது', ‘ஹம் ஹெய்னா'
‘ஆகட்' உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
இந்தநிலையில், பிரதியுஷா வெள்ளியன்று தனது குடும்பத்தினருடன் வீட்டில்
இருந்தார். திடீரென அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டுக்
கொண்டார்.
இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக
அருகில் உள்ள கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த
மருத்துவர்கள், பிரதியுஷா ஏற்கனவே ஏற்கனவே இறந்து போனதாக தெரியவித்தனர்.
பாலிகா வாது சீரியலில் ஆனந்தியாக நடித்து அசத்திய பிரதியுஷா, பிக்பாஸ்
7 ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். பல டிவி
சீரியல்களில் நடித்து பிரபலமான அவருக்கு 24 வயதாகிறது. டிப்ரஷன் எனப்படும்
மன அழுத்தம் தான் அவர் இப்படி முடிவு தேடக் காரணம் என்கின்றனர்.
அவர் தனது தற்கொலை குறித்த கடிதத்தையும் விட்டு செல்லவில்லை. அவரது தற்கொலை
குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரதியுஷாவும் அவருடைய ஆண் நண்பர் ராகுல் ராஜ் சிங்குக்கும் இடையே
பிரச்சனை எனவும், அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இப்படி
செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். ராகுலும் பிரதியுஷாவும் திருமணம்
செய்ய இருந்தார்கள் என்ற தகவல் வெளிவந்த நிலையில் இவ்வாறு
நிகழ்ந்திருக்கிறது.
Read more at: //tamil.oneindia.com/n
Read more at: //tamil.oneindia.com/n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக