சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
காங்கிரசுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச கடந்த வாரம் குலாம்நபி ஆசாத்,
முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்து திமுக தலைவர் கலைஞரை சந்தித்து
ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத்,
திமுக தலைவரின் கருத்துக்களை காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவிப்போம். மீண்டும்
பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.இந்தநிலையில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி
சென்றுள்ளார். அவர், இன்று காங்கிரஸ் துணைத் தவைர் ராகுல் காந்தியை
சந்தித்தார். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட்டால் திமுக மிக பெரும் தவறு இழைப்பதாகவே கருதவேண்டும்
அவருடன் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் உடனிருந்தனர். தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது தேமுதிக கூட்டணிக்கு வராததால், அதே அளவு ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்பதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இல்லை என்பதாலும், ஜி.கே.வாசன் பிரிந்து சென்றுவிட்டதாலும் இந்த முறை அத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுக கூறிவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன nakkheeran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக