திங்கள், 28 மார்ச், 2016

மனு கொடுத்த முதியவரை உதைத்து விரட்டிய பாஜக எம்பி (குஜராத்)....இவன்தாண்டா அசல் பாஜக எம்பி .


பாஜக எம்பி விட்டால் ரடாடியா-விடம் மனு கொடுக்க முயன்ற முதியவரை அவர் காலால் எட்டிஉைத்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம், போர்பந்தர் தொகுதி பாஜக எம்பி  விட்டால் ரடாடியா. இவர், ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான நிக‌ழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த மிகவும் வயதான முதியவர் ஒருவர் விட்டாலிடம் மனு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவரை விட்டால் ரடாடியா தனது காலால் எட்டி எட்டி உதைத்துள்ளார்.  உத்தரகாண்டில் ஒரு பாஜக எம் எல் ஏ குதிரையின் காலை அடிச்சு ஓடைசான்...இப்ப குஜராத்தில் ஒரு பாஜக எம்பி கிழவனை போட்டு ஒதைச்சு விரட்டுராய்ன்....மனுதர்மம் 
இந்த சம்பவம் தற்போது வீடியோக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பாஜக மற்றும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனிதாபிமானம் இன்றி செயல்பட்டுள்ள பாஜக எம்பியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் பாஜக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: