
வாஷிங்டன்,மார்ச் 31 (டி.என்.எஸ்) இந்தியாவை விட்டி மில்லியனர்கள் (லட்சாதிபதிகள்) வெளியேறுவது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள ஆய்வறிக்கை ஒன்றி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நியூ வேல்ட் வெல்த் என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையில், உலக அளவில் பிரான்சில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியதாகவும், முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு இடையே அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
பிரான்சிற்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு 9 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் 6 ஆயிரம் பேர்.
மில்லியனர்கள் தங்கள் நாட்டிற்குள் வரும் வருகையை பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு மட்டும் 8 ஆயிரம் மில்லியனர்கள் குடியேறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 7 ஆயிரம் மில்லியனர்களும், கனடாவில் 5 ஆயிரம் மில்லியனர்களும் உலகம் முழுவதும் இருந்து குடியேறியுள்ளனர்.
இந்தியா மற்றும் சீனாவை பொறுத்தவரை புதிய மில்லியர்னர்களை அதிக அளவில் உருவாக்கி வருவதால் இந்த வெளியேற்றம் ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக