காங்கிரஸுக்கு 32 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக
மார்ச் 30-இல் உடன்பாட்டில் கையெழுத்தாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சட்டப் பேரவைத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக,
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி
ஆசாத், மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநிலத் தலைவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மார்ச் 25-இல் சந்தித்துப் பேசினர்.
அப்போது, 40 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று
காங்கிரஸ் சார்பில் கோரப்பட்டது. ஆனால், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக
முன்வந்தது. இதனால், பேச்சுவார்த்தையைத் தொடர முடியாமல், கட்சித் தலைவர்
சோனியா காந்தியை ஆலோசித்துவிட்டுச் சொல்வதாக காங்கிரஸ் குழுவினர்
திரும்பினர்.
32 தொகுதிகள் ஒதுக்கீடு? இந்த நிலையில், மாவட்டத்துக்கு
ஒரு தொகுதி என்ற அடிப்படையில் 32 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முன்
வந்துள்ளதாகவும், இதற்கு உடன்பாடு தெரிவித்து கருணாநிதியை இளங்கோவன் மார்ச்
30-இல் சந்தித்து கையெழுத்திடுவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள்
கூறுகின்றன.
எஸ்டிபிஐ பேச்சில் இழுபறி? இந்த நிலையில், திமுகவுடன்
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியும் (எஸ்டிபிஐ) பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறது. 3 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு ஒதுக்கியபோல 5 தொகுதிகளை
ஒதுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்
பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக