தி.மு.க., கூட்டணியில் இடம்பெறவும், தொகுதி பங்கீடு குறித்தும், ஏற்கனவே
திரைமறைவில் முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம், புதிய தமிழகம் ரகசிய பேச்சு
நடத்தியது.குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், தனக்கு
கட்டாயம் ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, கிருஷ்ணசாமி,
நிபந்தனை விதித்திருந்தார்.ஆனால், அதை ஏற்க, தி.மு.க., தரப்பு
மறுத்துவிட்டது. இதனால், கருணாநிதியை நேரில் சந்தித்து பேசுவதற்காக, நேற்று
கோபாலபுரம் இல்லத்துக்கு காரில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமி, பாதி
வழியிலேயே திரும்பி விட்டார்.இதனால், கூட்டணி உடன்பாட்டில், இரு
கட்சிகளுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.- நமது நிருபர்
தினமலர்.com
தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக