மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தக் கயமைத்தனத்தை நடத்தி முடித்திருக்கிறது.
தேசத்துரோகி யாரெனக் கேட்டால்…
ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் இறையாண்மையை ஒரேயடியாக முடித்துவிடும் சதித்தனத்தில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. மன்மோகன் சிங் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீடு சட்டம், இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களை விபத்திற்கும் இழப்பீட்டிற்கும் நேரடியாகப் பொறுப்பாக்காமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டது. அதாவது, இந்திய அரசு அணு உலையை விற்ற நிறுவனத்துடன் இழப்பீடு குறித்துத் தனியாக ஒப்பந்தம் போட்டிருந்தால் மட்டுமே அவற்றைப் பொறுப்பாக்க முடியும் என அணு உலைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களைத் தப்ப வைக்கும் நோக்கில் நைச்சியமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
இப்படிபட்ட விதி இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், அணுவிபத்து இழப்பீடு குறித்த சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பொருத்தமாக உள்நாட்டு சட்டத்தைத் திருத்த வேண்டும் என இந்திய அரசை நிர்பந்தித்து வந்தது. இது குறித்து அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த மோடி, அணு விபத்துகளுக்கு அணு உலையை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்கக் கூடாது” எனக் கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக சர்வதேச அணுசக்தி கழகத்திடம் கடந்த மாதம் ஒப்புக்கொண்டு விட்டது. மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தக் கயமைத்தனத்தை நடத்தி முடித்திருக்கிறது.
அணு உலைகளே கூடாது என நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், அணு விபத்து ஏற்பட்டால், விபத்திற்குப் பொறுப்பான ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடம் இந்திய அரசோ மக்களோ இழப்பீடு கேட்கக்கூட முடியாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடி, தேசத்துரோகத்தில் மன்மோகன் சிங் உள்ளிட்ட அனைவரையும் விஞ்சிவிட்டார்.
இதுவும் போதாதென்று, கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற உலக வர்த்தகக் கழகத்தின் பத்தாவது மாநாட்டில் விவசாய மானியம் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் கையெழுத்திட்டிருக்கிறது, மோடி அரசு. அத்தீர்மானம் சில விதிவிலக்குகள் தவிர, உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி மானியத்தை ஏழை நாடுகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ரத்து செய்துவிட வேண்டும்; விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வது; அவற்றை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிப்பது ஆகியவை தொடர்பாக விரைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவுக்கு வர வேண்டும் எனக் கோருகிறது.
ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் நோக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தானியத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதும், இந்திய விவசாயத்தையும் உணவுத் தற்சார்பையும் அழிப்பதும்தான். பொது விநியோகம், நெல் கொள்முதல் ஆகியவை ஏழைகளின், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை. அவற்றை ஏகாதிபத்தியங்களின் நிபந்தனைக்கு உட்படுத்துவதென்பது விவசாயத்தையும், மக்களின் உயிரையும் முற்றுமுழுதாகப் பலியிடுவதன்றி வேறல்ல.
இந்திய மக்களின் உணவு உரிமை மட்டுமின்றி, அவர்களின் கல்வியுரிமையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியக் கல்வித் துறை சேர்க்கப்பட்டிருப்பதை விலக்கிக் கொண்டு, அதிலிருந்து வெளியேற வாய்ப்பிருந்தும், கல்வித் துறையைப் பன்னாட்டு கல்வி வியாபாரிகளுக்குத் திறந்துவிடுவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறது, மோடி அரசு.
இப்போது தெரிகிறதா, டில்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதல் தன்னுடைய துரோகத்தை மறைப்பதற்கு மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சதியென்று!
– தலையங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக