அந்த அடிப் படையிலதான் அவரை நன்றி யுணர்வோடு சந்திச்சேன். அம்மா நேரம் ஒதுக்கினா என் மகளோட மரணத்துக்கு நியாயம் கிடைக்க நிச்சயமா சந்திப்பேன்.கலைஞரிடம் கோரிக்கை வெச்சீங்க? அவர் என்ன சொன் னார்?
;சி.பி.சி.ஐ.டி. விசாரணையில எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை வேணும்னு சொல்லி மனுகொடுத்தேன். அறிக்கை கொடுக்கிறேன். ஆனா, சி.பி.ஐ. விசாரணைங்கிறது சட்டப்படி கோர்ட் மூலமா மூவ் பண்ண வேண்டியதுன்னு ஆறுதல் சொல்லி அனுப்பி னாரு.>விஷ்ணுபிரியா மர்ம மரணத்துக்கு யார் காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?
;என் மகளோட மரணம் கொலையாக இருக்குமோ என்பதுதான் எனது சந்தேகம். அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது எனது முகவரிக்கு வந்த 9 பக்க கடிதம். அதில், என் மகள் இறந்தபிறகு எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தடயங் களை மறைக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்று விலாவாரியாக உள்ளது. என் மகள் குறித்து என்னிடம் ஃபோன்ல பேசின எஸ்.பி. செந்தில் குமார், கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போகப் போறேன்னு சொன்னவர், கடிதம் எழுதி வெச்சிருக்கான்னு சொன்னது இன்னைக்கு வரைக்கு என் மனசுக்குள்ள வந்து வந்து போகுது. க
தவை உடைச்சுக்கிட்டு அவ ரூமுக்குள்ள போறதுக்கு முன்னாடி கடிதம் எழுதினது அவருக்கு எப்படி தெரியும்? அவளோட செல்ஃபோன், லேப்டாப், பென் டிரைவ், 15 முதல் 17 வரையிலான விஷ்ணுபிரியா எழுதிய கடிதப் பக்கங்கள் எல்லாம் எங்கே?
இப்படி பல்வேறு சந்தேகங் களுக்கு இன்னும் விடை கிடைக்கல. ஜெகநாதன் மில் விவகாரமும் என் மகள் மரணத்தில் தொடர்பு இருக்கு மோன்னு சந்தேகமா இருக்கு. தேவையில்லாம என் மகளுக்கு காதல் அது இதுன்னு திசைதிருப்பி, மரணத்துக்குக் காரணமா இருந்த போலீஸ் அதிகாரிகளை காப்பாத்துற துலேயே குறியா இருந்தா பெத்த வன் மனசு என்ன பாடுபடும்? -மனோ விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக