உலகத்தின் பல்வேறு இன குழுக்களும் இதையே சொல்ல ஆரம்பித்தால் என்ன செய்வது,
எல்லா இன குழுக்களுக்கும் நாம் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு,
முதலில் நமது நாட்டுக்குள் அனைவரையுமே ஒன்றிணைக்க முடியாத போது, எதற்கு
இந்த வெத்து வேஷம், இன்னும் மூணு வருஷங்களும் இவங்க இப்படியே பேசிகிட்டு
இருந்தாங்கன்னா, உங்க ஆசையை உங்க வீட்லயே நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்
என்று மக்கள் இவங்களை வீட்டுக்கு அனுப்பிச்சுடுவாங்க, எவ்வளவோ முக்கியமான
விஷயங்கள் ஏராளமாக இருக்கு, அணுகுண்டு போட்ட ஹீரோஷீமா நகர் 10
வருடத்துக்குள், பொருளாதாரத்தில் பலம் பொருத்திய பிராந்தியமாக
உருவாயிடுச்சி, அவங்க எல்லாம் இப்படி பெரும நியாயம் பேசல, நாம் நல்ல
விஷயங்களை விதைப்போம், நல்ல கருத்துக்களை வளர்ப்போம், நாம் எதுவும் சொல்ல
வேண்டியதில்லை, உலக நாடுகள் நம்மை நிச்சயம் மதிக்கும், வேற்றுமையில்
ஒற்றுமை என்ற பரந்த எண்ணம், கடந்த 60 வருடங்களாக ஜனநாயகத்தை கட்டி
காத்துவரும் நாம், அதுவே நமக்கு பெருமை, அது போதும், உங்கள் விஷ விதிகளை
இங்கே விதைக்க வேண்டாம்,
கோல்கட்டா : இந்தியாவை ஒட்டு மொத்த உலகமே தலைவணங்கக் கூடிய நாடாக உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது என அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.< கோல்கட்டாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியாவை வளம் பொருந்திய நாடாக, சுரண்டலற்ற, சுயமரியாதை கொண்ட நாடாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. ஒட்டுமொத்த உலகமும், "பாரத் மாதா கீ ஜே' என முழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதனை செயல்படுத்த நாம் நாட்டுக்காக வாழ வேண்டும். நம் நாடு பிளவடைந்து பாக்., உருவாகிய பிறகு, "பாரதம்' என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடவில்லை. அவர்கள் ஏற்க முடியாத பண்புகள் பாரதத்தில் இருந்ததே அதற்கு காரணம். வேதங்கள் தோன்றிய இடங்களும், சமஸ்கிருத மொழி மற்றும் அதன் இலக்கணங்கள் தோன்றிய இடங்களும் தற்போது பாகிஸ்தானில்தான் உள்ளன. ராமாயணம் நம் நாட்டின் பழங்கால வரலாறு ஆகும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர் பதவியில் இருக்கும் நான் அதிர்ஷ்டசாலி. இவ்வாறு அவர் கூறினார் dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக