தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, கடும் மோதல்ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., மேலிட தலைவர்கள் பிரகாஷ் ஜாவடேகர், முரளிதரராவ் போன்றோர்,
'அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி' என, விமர்சித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வை
விமர்சிக்காத, மாநில தலைவர்களை, மேலிடம் சமீபத்தில் கண்டித்துள்ளது. பா.ஜ.,
சமூக வலைத்தள பிரிவோ, ஒருபடி மேலே போய், ஜெயலலிதாவையும், சசிகலாவையும் விமர்சித்துக்கா, பெரிய அக்கா ,
'சின்னபொம்மலாட்டம்'
என, கார்ட்டூன் வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியது. 'பா.ஜ.,வுக்கு பதில்
அளிக்க வேண்டாம்' என, பொறுமை காத்த, அ.தி.மு.க., தலைமை, மத்திய அமைச்சர்
பீயுஷ் கோயலின் புகாருக்கு, ஓ.பன்னீர்செல்வம் மூலம் பதில்தந்தது.
இதற்கிடையே, 'பீயுஷ் கோயலின் புகாரில் உண்மை உள்ளது' என ஜாவடேகர், நேற்று கூறியிருப்பதும்; கோயலுக்கு, நத்தம் விஸ்வநாதன் மூலம், அ.தி.மு.க., மீண்டும் பதில் அளித்திருப்பதும், மோதலை அதிகரித்துள்ளது. கடைசியில், அ.தி.மு.க.,வுடன் - பா.ஜ., கைகோர்க்கும் என, எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் அதிகரித்துள்ளது.காஞ்சி ஜெயேந்திரரின் பிறந்த நாள் விழாவில்,பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா,அ.தி.மு.க., அரசை விமர்சித்த பிறகே, இந்த மோதல் துவங்கி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:மத்தியில் ஆட்சி அமைத்துள்ள நிலையில்,தமிழகத்தில் அதிக ஓட்டுகளை பெற வேண்டிய நிலையில், பா.ஜ., உள்ளது.அதற்கு, மற்ற எதிர்க்கட்சிகளை போல், ஆளும் கட்சியை கடுமையாக தாக்குவதே சிறந்த வழி என, மேலிடம் கருதுகிறது. தேர்தலில், இதுபோன்ற மோதல்கள் சகஜம்.தமிழகத்தில், பா.ஜ., வேரூன்ற, ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக