tamil.chennaionline.com : சென்னை,மார்ச் 29 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபைக்கு மே 16ஆம் தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வந்த
கட்சிகள் தற்போது பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
ஆனால், தமிழகத்தின் முக்கிய பெரும் கட்சியான அதிமுக-மட்டும், எந்த விவாகாரங்களிலும் தீவிரம் காட்டாதபடி, அமைதியான சுழலில் இயங்க, தற்போது வாக்காளர்களை தங்கள் வசம் இழுக்க சத்தமில்லாமல் ஒரு திட்டத்தை போட்டு அதை செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 50 வாக்காளர்களுக்கு ஒரு பொருப்பாளரை அதிமுக நியமித்துள்ளதாம். இந்த 50 வாக்களர்களும் அதிமுக-வுக்கு வாக்கு செலுத்தும் வகையில், அந்த ஒரு நபர் இவர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வாராம். (தேர்தல் கெடுபிடிகளால் பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவே தேர்தல் முடிந்ததும் அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் சாவகாசமாக பணம் வழங்கப்படும்....பொறுப்பாளர்களின் உறுதி மொழியை மக்கள் நம்பி காத்திருக்க கூடிய சாத்தியம் இருக்கிறது ...இது ஒரு ஸ்ட்ராங்கான பொசிபிளிட்டீஸ்.... இந்த டெக்னிக்கை எப்படி எதிர்கட்சிகள் எதிர்கொள்ள போகின்றன என்பது தெரியவில்லை..... )
தமிழகம் முழுவதும் இதுபோன்ற பணிகளை அதிமுக முடக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்பணிகளே மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு வாக்குச் சாவடி குழு (பூத் கமிட்டி) ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழு 1000 வாக்காளர்களுக்கு 20 பேர் எனற வகையில் அமைக்கப்படுகிறது. இக் குழுவில் உள்ள 20 பேரில் ஒவ்வொருவரும் 50 வாக்காளர்களுக்கான பொறுப்பாளர்கள். இந்த 50 வாக்காளர்களை அதிமுகவுக்கு வாக்களிக்க வைப்பது இவர்கள் பணி. இந்த 20 பேரில் 5-க்கும் குறையாமல் பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச் சாவடியில் உள்ள 1000 வாக்குகளில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இரு கம்யூனிஸ்ட்டுகள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இதர கட்சிகள் வாக்குகள் எவ்வளவு என்பதை அந்தக் கையேட்டில் பட்டியலிடுவதற்கான காலங்கள் உள்ளன. இவர்களில் கட்சி சார்ந்த வாக்காளர்களை தவிர்த்து பொது வாக்காளர்களை அதிமுக ஆதரவாக பிரசாரம் மூலம் கொண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக