
இதற்கிடையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுவித்து மார்ச் 29ஆம் தேதியன்று மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.
மேலும் மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் அன்ஷுல் மிஸ்ரா, கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் ஆர். ஷீலா, அருணகிரி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மகேந்திரபூபதியின் இந்தத் தீர்ப்பு நீதித்துறை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று மாவட்ட முன்மை நீதிபதி ஏ.எம். பஷீர் அகமதுவும் தலைமை மாஜிஸ்ட்ரேட் பி சரவணனும் மேலூர் நீதிமன்றத்திற்கு திடீரென வருகைதந்தனர்.
அங்கு நடந்த சோதனையையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு அவர்கள் அறிக்கை ஒன்றை அனுப்பினர். அதற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக