கருப்பு வெள்ளை கீ போர்ட்கள்
மென்பொருள் துறை. இந்தியாவில் இன்றைக்கு default ஆன விஷயம். மென்பொருளில் இல்லாமல் வேறு துறைகளில் இருந்தால் நாம் ஒரு படி கீழே. பெண்கள் சாப்ட்வேர் மாப்பிள்ளைகளுக்காகவும், ஆண்கள் சாப்ட்வேர் பெண்களுக்காகவும் வாழ்க்கையினை நிர்ணயித்துக் கொண்ட வேகம். ஜங்க் புட், பிட்சா, ஆண் பெண் பேதமின்மை, 14 மணி நேர வேலை, ஜீன்ஸ் டீசட்டையில் அலுவலகம், ப்ளாக்பெர்ரியில் வீங்கும் கட்டைவிரல்கள்.
கட்டற்ற சுதந்திரம், இணையத்தில் எல்லைகள் இல்லை. பத்தாவது படித்தவர் பி.ஏ எழுதலாம், எட்டாவது படித்தவர் எம்.ஏ எழுதலாம் என்கிற சீமான் டூட்டோரியல் விளம்பரங்களை பின் தள்ளியதில் முக்கிய பங்கு கணினி பயிற்சி நிறுவனங்களுக்கு. ஜாவா, டாட் நெட், சி ஷார்ப், ஆரகிள், எஸ் ஏ பி என எழுத்து இடியாப்பத்தில் முழி பிதுங்கி, ரேடியேஷன் தாங்கிக் கொண்டு ஒரு தலைமுறையே கணினி முன்பாக தன் எதிர்காலத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மாநிலங்களும், நகரங்களும் அடுத்த தெருவாய் உருமாறி, நிறம் மாறி, சிகாகோ சிந்தாதரிப்பேட்டையாகவும், நியுயார்க் நங்கநல்லூராகவும், பாஸ்டன் பாலவாக்கம் பக்கத்திலும் வர செய்த துறை. எட்டாவது படித்தவர் எஸ் ஏ பி படித்து கொஞ்சம் முக்கி முனங்கி தேறினால், அடுத்த மூன்று வருடங்களில் ’சியாட்டில் உங்களை வரவேற்கிறது’ போர்டினை, கையில் மினரல் தண்ணீர் பாட்டிலோடு கடக்கலாம். கீக் (Geek) என்பது செக்ஸியாய் மாறிப் போனது கடந்த பத்தாண்டுகளில் தான்.
எல்லாமே ஒரு பெட்டி, செர்வர், கொஞ்சம் மூளை, நிறைய லாபம், உலகமுழுக்க வர்த்தகம் என விரியும் நிகர்மெய் சமுத்திரத்தில் கருப்புப் பண முதலைகள் நன்றாகவே நீந்துகின்றன.
மென்பொருள் என்பது பைனரியில் உருவான, ஒரு குறிப்பிட்ட வேலையை சிறப்புறவும், தொடர்ச்சியாகவும் செய்யக் கூடிய ஒரு வழி. மென்பொருள் அரிதான காலத்தில் ஆரம்பித்த இன்போஸிஸ் இன்றைக்கு பல பில்லியன் டாலர் நிறுவனம். மென்பொருளுக்கு விலை நிர்ணயிப்பது என்பது கடினம். ஏனெனில், எல்லாமே டிஜிட்டல் பைட்டுகள், இதன் சரியான விலையினை கண்டறிவதென்பது திருப்பதியில் மொட்டை தேடும் நிலை. ஒரு மென்பொருளின் விலை என்பது அதை வாங்குபவரின் திறனைப் பொருத்தது. இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது நம் கதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக