பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள வசிரிஸ்தான் பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுபாட்டில் உள்ளது. பழமைவாதிகளான அவர்கள் அங்கு வாழும் மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி பெண்கள் அதிநவீன ஆடைகளை அணிய கூடாது. அதற்கான துணிகளை வாங்க கூடாது என அறிவித்து இருந்தனர். அதையும் மீறி தெற்கு வசிரிஸ்தானில் வானா என்ற இடத்தில் ஆடம்பர ஆடைகள் விற்கப்பட்டன.
அதை அறிந்த தலிபான் தீவிரவாதிகள் நேற்று வானா கடை வீதியில் திரண்டனர். அங்கிருநத கடைகளில் புகுந்து பெண்கள் அணியும் ஆடம்பர ஆடைகளை பறி முதல் செய்து அள்ளி வந்தனர். அவற்றை நடுவீதியில் குவித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இதையும் மீறி இது போன்ற ஆடைகள் மற்றும் துணிகளை விற்கும் கடைக்காரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்.
இவை தவிர கேமராவுடன் கூடிய செல்போன்களை விற்கவும் தடை விதித்துள்ளனர் அதையும் மீறிவிற்கும் கடைக்காரருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்.
விற்பவர்கள் மட்டுமின்றி அவற்றை வாங்குபவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக