உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி,சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை,சேருவில பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
குச்சவெளிப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டது. இதனால் அவர்களின் பிரச்சினையும் தீராது, எமது பிரச்சினையும் தீராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே தெளிவான புரிந்துணர்வு உண்டு. எனினும் எம்மிடையே ஒருமைப்பாடு தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும். மக்களின் உரிமைகளைப் பொறுத்தவரை தெளிவான நிலைப்பாடு அவசியம். எமது வாக்குகளைப் பிரித்து பெரும்பான்மையினம் நன்மை பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக