சனி, 30 ஜூலை, 2011

மோகன்லால் மமூட்டி விவகாரம் முடி மறைக்க முயற்சி?



திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி ஒரு வாரத்துக்கு மேல் ஆன போதும், இதுவரை சோதனை குறித்த எந்த தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மலையாள முன்னணி நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங் களில் கடந்த 22ம் தேதி வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, கொச்சி, பெங்களூர், திருவனந்தபுரத்தில் இந்த சோதனை நடந்தது. 4 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்தும் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்க வில்லை. வழக்கமாக முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடந்தால் ஒருசில நாட்களிலேயே சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்,

ஆவணங்கள் பற்றிய விவரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள். ஆனால் ஒரு வாரத்துக்கு பின்னரும் எந்த விவரத்தையும் வருமான வரித்துறையினர் வெளியிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
சோதனை நடந்த அன்றே இது குறித்து வருமான வரித்துறையினரிடம் கேட்டபோது, மறுநாளே இது குறித்து செய்தி குறிப்பு வெளியிடுவதாக தெரிவித்தனர். ஆனால் பல நாட்கள் ஆன பிறகும் சோதனை குறித்த விவரங்களை கேட்டால் வாய்திறக்க மறுப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கத்திற்கு மாறாக தாமதமானால் எதோ பூசி மெழுகும் வேலை நடப்பதாக எல்லோருக்குமே சந்தேகம் எழத்தான் செய்யும். 

கருத்துகள் இல்லை: