புதன், 27 ஜூலை, 2011

கலைஞர்: உறவும் இல்லை பகையும் இல்லை கனிமொழி அமைச்சராகணும்


தி.மு.க பொதுக்குழுவில் காங்கிரசோடு கலைஞர் மேற்கொண்ட டீலிங்கை கவனிச்சீங்களா? நாமதான் ஏற்கனவே சொன்னோமே, காங்கிரசோடு உறவும் இருக்காது பகையும் இருக்காதுன்னு அதே மாதிரி தான் கலைஞரோட அணுகு முறையும் இருக்குது. அவ ரோட பேச்சை கவனிச்சீங் களா.. யாரிடத்திலும் கெஞ் சிக் கேட்டு ஆதரவைப் பெறவேண்டும் என்ற நிலையில் தி.மு.க இல் லை. நட்பு என்று ஒன்று உருவான பிறகு அந்த நட் பை நிரந்தர மாகக் காப் பாற்றுவது தான் நாகரிகம். அந்த நட்பை நாங் கள் இன்று போற்று கிறோம். நாளையும் போற்றுவோம். நாளை மறுநாள், நீ போற்றத் தேவை யில்லை என்று அவர் களே சொல்லிவிட் டால் அதுவரையில் இன்றுள்ள நிலை நீடிக்கும். status quo will maintainன்னு கலைஞர் சொன் னார். அதாவது, ஆ.ராசா-தயாநிதி அமைச்சராக இருந்த இடங்கள் காலியாகவே இருக்கும். அதேநேரத்தில், காங்கிரசுடனான உறவு தொடரும்ங்கிறது கலைஞரின் நிலைப்பாடு.''

""கனிமொழி பெயிலில் வந்ததும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரணும்னு கலைஞர் வலியுறுத்தியதையும் நாமதான் ஏற்கனவே சொல்லியிருந்தோம். அவர் வரும்வரை, தி.மு.க.வின் அமைச்சரவை இடங்கள் காலியா இருக்குமா?''

""சிறையிலிருந்து கனிமொழி வெளியே வந்து, அமைச்சரானால் அவர் மீது சுமத்தப் பட்ட பழி நீங்கும்னு கலைஞர் நினைக்கிறார். நாம ஏற்கனவே என்ன பேசிக்கிட் டோமோ அதுதான் பொதுக்குழுவில் நடந்திருக்கு.''

""கரெக்ட்தான்.. மு.க.ஸ்டாலின் எல்லா மாவட்டங்களுக்கும் சுதந்திரமா போய் செயல்படணும். அதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாதுன்னு அவரோட ஆதரவாளர்கள் நினைக்கிறாங்கன்னு சொன்னோம். அதற்கான குரல்கள்தான் பொதுக்குழுவில் பலமா ஒலித்திருக்கு. தி.மு.க. பொதுக்குழுவில் மோதல் ஏற்படும், கலவரம் உருவாகும்னு ஆளுந்தரப்பு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தது. குட்டையைக் குழப்புவதற்கான சாய்ஸை தி.மு.க தலைமை தரலை.''

கருத்துகள் இல்லை: