சனி, 30 ஜூலை, 2011

தமிழகம் முழுவதும் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு


திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 7 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணியமர்த்துவது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அரசு கைவிட்டு பழைய முறையிலேயே பணியமர்த்த வேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 20-ந் தேதி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

2-வது முறையாக வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

அன்று திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: