புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக 6000 படையினரை இழந்தோம். மற்றுமொரு ஆறாயிரம் படையினர் அங்கவீனமாகியுள்ளனர். இவ்வாறான இழப்புகளுக்கு மத்தியிலேயே பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்தோம். அந்த பயங்கரவாதத்தை அரசியல் வாதிகள் தோற்கடிக்கவில்லை என்று முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நேற்றைய விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்ற கட்டிடத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாதத்தை அரசியல்வாதிகள் அல்ல படையினரே தோற்கடித்தனர். அதேபோல செயலாளருக்கு பின்னர் சென்ற மேஜர் ஜெனரல்களும் அல்ல என்றும் அவர் சொன்னார்
இப்படி சொல்பவருக்குத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க கோரினர். தமிழ் மக்களும் பெருவாரியாக அவ்வாறே வாக்களித்தனர். இன்றும் அவ்வாற கோரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்._
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக