வியாழன், 28 ஜூலை, 2011

யாழில் குறையக்கூடிய3 ஆசனங்களை கொழும்பு போன்ற பல்தேசிய மாவட்டங்களில்

யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு ஆறாக குறைக்கப்படலாம் என தேர்தல் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

2009 ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யாழில் மக்கள் தொகையில் 320,000 வீழ்ச்சி ஏற்பட்டமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைக்கப்படும் 3 ஆசனங்களும் பதுளை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
தமிழர்கள் புலன்பெயர்வதாலும் மற்றும் உள்நாட்டிலேயே யாழ்பாணத்தை விட வெள்ளவத்தையையே ஈழத்தமிழர்கள் பெரிதும் விரும்பும் போக்கால் வெள்ளவத்தை யாழ்பாணத்தை விட தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசமாக மாறிக்கொண்டு வருகிறது.
யாழ்மாவட்டத்தில் குறையக்கூடிய ஆசனங்களை யாழ் பெருங்குடி மாந்தர் கொழும்பு போன்ற பல்தேசிய மாவட்டங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
 

கருத்துகள் இல்லை: