2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இப்படி ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும்னு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதிர்பார்த் திருக்குமா?''
""பிரதமர் ராஜினாமா செய்யணும், ப.சிதம்பரம் ராஜினாமா செய்யணும்னு பா.ஜ.க தீவிரமா வலியுறுத்துவதைத்தானே சொல்றே... 2ஜி விவகாரத்தில் காங்கிரசுக்கு எந்த சம்பந்தமுமில் லாதது போலவும், தி.மு.க.வும் அந்தக் கட்சியின் அமைச்சரான ஆ.ராசாவும்தான் எல்லாத்துக்கும் காரணம்னும் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் ஒரு தோற்றத்தை உருவாக்கி வந்தது. ஆனா, திங்கட்கிழமையன்னைக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அதை ஆ.ராசா உடைச் சிட்டாரே!''
""தலைவரே.. 2ஜி விவகாரத்தில் தன் மேலே எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் குற்றம்சாட்டிய போது, நாடாளுமன்றத்திலும் சுப்ரீம் கோர்ட்டிலும் பத்திரிகை பேட்டிகளிலும் ஆ.ராசா என்ன சொல்லி வந்தாரோ அதைத்தான் இப்ப கோர்ட்டிலும் சொல்லியிருக்கிறார். நீதியின் முன்னால் அவரோட குரல் ஒலித்து, அதில் பிரதமர் மன்மோகன்சிங் பெயரும் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெற்றதால, தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைச்சிருக்கு.''
""ஆ.ராசா தனக்குன்னு தனியா வக்கீல் வைக்காமல் அவரே வாதாடியிருக்காரே..''
""அவர் வக்கீலுக்குப் படிச்சவர்தானே தலைவரே.. அரசியலில் தீவிரமாவதற்கு முன்னாடி பிராக்டீசும் பண்ணிக்கிட்டிருந்தார். புத்தகப் பிரியரான அவர், திகார் ஜெயிலில் தன்னை வந்து பார்க்கிறவங்க ஏதாவது புத்தகம் கொடுத்தால், இப்ப வேணாம். வழக்குக்காக நான் சட்டப்புத்தகங்களை தீவிரமா படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்லி மற்ற புத்தகங்களை ஒதுக்கிட்டார்.''
""சொந்த வாதமா இருந்தாலும் வலுவான வாதங்களா இருந்திருக்கே.. அதனால்தானே இந்தளவுக்குப் பரபரப்பாயிடிச்சி.''
""ஆமாங்க தலைவரே.. 2003-ல் பா.ஜ.க தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பா என்ன கொள்கை வகுக்கப்பட்டதோ அதனடிப்படையில்தான் நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கினேன்னு சொன்ன ராசா,
பா.ஜ.க ஆட்சியில் அமைச்சரா இருந்த அருண்ஷோரி 26 லைசென்ஸ் கொடுத்திருக்கிறார். தயாநிதி மாறன் அமைச்சரா இருந்தப்ப 25 லைசென்ஸ் கொடுத் திருக்கிறார். என்னோட பதவிக்காலத்தில் 122 லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கு. என்னுடைய நடைமுறை தவறுன்னா, 1993லிருந்து தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சரா இருந்த எல்லோரும் இப்ப இருக்கவேண்டிய இடம் திகார் ஜெயில்தான்னு கோர்ட்டில் சொல்லியிருக்காரு.''
""பிரதமர் மன்மோகன்சிங்கையும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் ஆ.ராசா சுட்டிக் காட்டியதுதானே பெரியளவிலான விவாதத்தை உண்டாக்கியிருக்கு...''
""2ஜி ஒதுக்கீடு தொ டர்பா பிரதமருடன் விவாதிக்கப்பட்டுதான் முடிவெடுக்கப்பட்டதுங் கிறதையும், யுனிடெக்- டிபி ரியாலிட்டி நிறு வனத்தின் அலைக்கற்றை கள் வெளிநாட்டு நிறு வனங்களுக்கு விற்கப்பட் டது பற்றி அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம் பரத்துக்கு தெரியும்ங்கிற தையும் கோர்ட்டில் ஆ.ராசா சொல்லியிருப்பதுதான் விவாதத்தை உண்டாக்கி யிருக்கு. இதை ராசா ஏற்கனவே தொடர்ந்து சொல்லி வந்தார்.
தன்னோட மந்திரிபதவி விலகல் கடிதத்தை பிரதமரை சந்தித்துக் கொடுத்தபோதுகூட, 2ஜி ஒதுக்கீட்டில் எந்தத் தவறும் இல்லைன்னு ராசா சொன்னப்ப இந்த விவகாரம் அரசிய லாக்கப்படுவது பற்றி பேசிய பிரதமர், உங்களை அக்யூஸ்ட்டுன்னு சொன்னா, நான் இதில் கோ-அக்யூஸ்ட்டுன்னு ராசாகிட்டே சொல்லியிருக்கிறார். இப்ப கோர்ட்டில் ராசா ஓப்பனா பேசியதும், எதிர்க்கட்சிகள் மறுபடியும் பிரதமரின் ராஜினாமாவையும் ப.சி.யின் ராஜினாமாவையும் வலியுறுத்துது.''
""தன்னை நோக்கி விவகாரம் நகர்வதைப் பார்த்ததும் ப.சி பதட்டமாகி, மறுத்திருக் கிறாரே...''
""காங்கிரஸ் கட்சியும் பதட்டமாகியிருக்கு. தி.மு.க பக்கம் பந்தைத் தட்டிவிட்டு தப்பிச்சிடலாம்னு நினைச்சாங்க. ஆ,ராசா இப்ப காங்கிரஸ் பக்கம் பந்தைத் திருப்பி விட்டிருக்காரு. காங்கிரஸ் மீது வெறுப்பிலிருந்த தி.மு.க. தொண்டர்கள் தமிழகமெங்கும் உற்சாகமாக இருக்காங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக