ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.ஹல் இணையத்தளமொன்றிற்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இம் முறைப்பாடு தொடர்பில் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் பேராசிரியரைத் தேடி வந்தனர். பின்னர் அவருடனான தொடர்பு கிடைத்ததையிட்டு மேற்படி முறைப்பாடு தொடர்பில் பேராசிரியரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக