வாஷிங்டன் : "கடந்த 1970களில், பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈடுபட்டன' என, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆவண காப்பகத்திலிருந்து, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கடந்த 1970ம் ஆண்டுகளில், பாகிஸ்தான், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுப்பதற்கு, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த 1978 - 81 வரையிலான காலகட்டத்தில், ஆணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு இருந்தது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாஸ்மா என்ற இடத்தில், அணு உலை அமைக்கும் நடவடிக்கைகளில், பாகிஸ்தான் ஈடுபட்டது. இதற்கு தேவையான செறிவூட்டப்பட்ட யூரேனியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, அணுசக்தி அளிக்கும் நாடுகளிடமிருந்து பெறுவதற்கு, பாகிஸ்தான் முயற்சித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன. அணுசக்தி தொடர்பான வசதிகளை அளிக்கும் நாடுகளுக்கு, அமெரிக்காவும், பிரிட்டனும், உத்தரவுகளை பிறப்பித்தன. பாகிஸ்தானுக்கு அணுசக்தி தொடர்பான உதவிகளை அளிக்கக்கூடாது என்ற உத்தரவும், அதில் முக்கியமானது. இதையடுத்து, சாஸ்மாவில் அணு உலை அமைப்பதற்கான உதவிகளைச் செய்ய முன்வந்த பிரான்ஸ் அரசு, தன் திட்டத்தை கைவிட்டது. இது, பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சிக்கு, பிரிட்டனும், அமெரிக்காவும், தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தாலும், இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுவது குறித்து, இந்திய உளவு அமைப்புகள் நன்கு தெரிந்து வைத்திருந்தன. தன்னை விட, இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு முன்பே, அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை, பாகிஸ்தான் பெற்று விடும் என்பதை, இந்திய உளவு அமைப்புகள் தெரிந்து வைத்திருந்தன. ஆனாலும், அமெரிக்காவும், பிரிட்டனும், இந்தியாவை பொருட்படுத்தவில்லை என்பதும், அமெரிக்க ஆவணங்களின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆவணங்களில், பாகிஸ்தான் அணு ஆயுத விஞ்ஞானி ஏ.க்யூ.கான் பற்றிய எந்த தகவலும் இடம் பெறவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக