கடந்த வருடம் எம்.வீ. சன்ஸீ கப்பலில் கனடா சென்றடைந்து அடைக்கலம் கோரும் தமிழர் ஒருவரை நாடு கடத்தும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. இவர் தனது சொந்த நாடான இலங்கையில் யுத்தக் குற்றமிழைத்தார் எனக் கண்டறியப்பட்டதனாலேயே இந்த நாடுக் கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தான் விடுதலை புலிகள் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இயக்கம் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவர் எந்த குற்றத்தையும் இழைத்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால் வேறு நபர்களை யுத்தம் குற்றம் இழைக்கும்படி தூண்டினார் என கூறப்பட்டுள்ளது. இவரது வாக்கு மூலத்தை புறவயமாக ஆராயும்போது இவர் வேறு ஆட்களை குற்றம் இழைக்கும்படி தூண்டியதாக தெரிய வருகிறது என அகதி சபை நீதவான் றெம்பல் கூறியுள்ளார். இவர் எம்.வீ. சன்ஸு கப்பலில் கனடா சென்றடைந்த 500 அகதிகளில் ஒருவராவார். இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்த தமிழர்கள். இந்த புகலிடம் கோருவோரில் அதிகமானோர் விடுவிகப்பட்டனர். குறிப்பிட்ட இந்த நபர் உட்பட இன்னும் 8 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக