வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் ஸ்ரீரிஷ் பரத்வாஜ் ஹைதராபாத் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சிரஞ்சீவியின் மகளும். ஸ்ரீரிஷ் பரத்வாஜின் மனைவியுமான ஸ்ரீஜா, கணவர் தன்னை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
2007ம் ஆண்டு இவர்கள் இருவரும் ஸ்ரீஜா குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

முன்னதாக முன்ஜாமீன் கோரி ஸ்ரீரிஷ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் நிராகரித்திருந்தது. நீதிமன்றத்தில் சரண் அடைந்து உரிய நீதிமன்றத்தில் முறையான ஜாமீன் பெறுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக