புதன், 27 ஜூலை, 2011

நாமதான் பெரிய மெஜோரிட்டிலே இருகொம்லே உடன்பிறவா வியாதி


கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கிற ஏரியா இருக்குதே... அங்கேதான். எது கட்டணும்னாலும் அப்ரூவல் அவசியம். சம்பந்தப்பட்ட மாண்புமிகுகிட்டே உடன்பிறவா தரப்பு பேசியிருக்கு. ஒரு சதுரஅடிக்கு 300 ரூபாய் தனிகவனிப்பு இருந்தாதான் அனுமதி தரணும்னு சொல்ல, மாண்புமிகுவே ஷாக்காயிட் டாராம். போன ஆட்சியில சதுர அடிக்கு 10 ரூபாய், 15 ரூபாய்தாங்க. இப்ப நாம இவ்வளவு கேட்டா சரியா இருக்குமான்னு இழுக்க...உடன்பிறவா தரப்போ, அவங்க மைனாரிட்டி கவர் மெண்ட்டு. எதையும் பயந்து பயந்து செஞ்சாங்க. நாமதான் மெஜாரிட்டி யோட இருக்கோம்ல.. தைரியமா கேளுங்கன்னு சொல்லியிருக்கு. இதை யடுத்து, சம்பந்தப்பட்ட சங்கங்களோடு பேசியதில் சதுர அடிக்கு 110 ரூபாய்னு முடிவு எட்டப்பட்டிருக்கு. அதிலும், ஒரு சில பேர் இந்த ரேட் பற்றி யோசிக் கிறாங்களாம். அதனால, 5 கோடி சதுர அடிக்கான கட்டட அனுமதி ஃபைல்கள் பென்டிங்கில் கிடக்குது. வசூலிக்காம இதையெல்லாம் க்ளியர் பண்ணக்கூடாதுன்னு உத்தரவாம்.''

""நல்ல பாலிசி...'

கருத்துகள் இல்லை: