போர்ச்சுகல் நாட்டில் 2007ம் ஆண்டில் கடத்தப்பட்ட சிறுமியை, காஷ்மீரின் லே பகுதியில் லண்டன் பெண் அடையாளம் கண்டார். இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி கேத், ஜெர்ரி மெக்கைன். இவர்கள் 2007ம் ஆண்டு மே மாதத்தில் போர்ச்சுகல் நாட்டின் ப்ரையா டா லஸ் என்ற நகருக்கு தங்களது 4 வயது மகள் மெடலினுடன் சுற்றுலா வந்தனர். அங்கு மெடலினுக்கு பிறந்த நாள் கொண்டாடினர். அதில் போர்ச்சுகலில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டு நண்பர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தை பயன்படுத்தி சிறுமி மெடலினை யாரோ கடத்தி சென்றனர்.
இது தொடர்பாக போர்ச்சுகல் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், மெடலின் கடத்தல் பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் 2008 ஜூலையில் அந்த வழக்கை கைவிட்டனர். இந்நிலையில், மெடலினின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லண்டனை சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் காஷ்மீரின் லே பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்கு மெடலினை அவர் அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.
இப்போது 8 வயதாகும் அந்த சிறுமி பற்றி தன்னுடன் வந்திருந்த பயணிகளிடம் தெரிவித்தார். அதற்குள் சிறுமியை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதைத் தடுத்த ஒரு தம்பதியினர், அவள் தங்கள் குழந்தை என்று கூறி மீட்டனர். இதுபற்றி காஷ்மீர் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. மெடலினின் பெற்றோர் கேத், ஜெர்ரி மெக்கைனுடன் அவர்கள் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் இந்தியா வர முடிவு செய்துள்ளனர். எனினும், அது மெடலின்தானா, அவளை இதுவரை கவனித்து வந்தவர்கள் யார் என்பது பற்றி காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கேத் & ஜெர்ரி தம்பதியின் மகள்தான் அவள் என்பதை நிரூபணம் செய்ய மெடலினுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக