ராமநாதபுரம்: விபசாரத்தில் ஈடுபடுத்த திருமங்கலம் சிறுமியை, ஊர், ஊராக வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, "காப்பாற்ற' சொல்லி கதறியுள்ளார். ஆனால், விபசார கும்பல், அவரது வாயைப் பொத்தி இடம் மாற்றி அழைத்துச் சென்றது என, சிறுமியின் தாயார் தெரிவித்தார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வாகைகுளத்தைச் சேர்ந்த, 17 வயது ஈஸ்வரியின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தாய் கூறியதாவது: என் கணவர் ஆடு மேய்க்கிறார். மகன் பள்ளியில் படிக்கிறான். என் மகளை அப்பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணத்தின் போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதனால், 10 நாட்களிலேயே ஈஸ்வரி எங்கள் வீட்டிற்கு துரத்தப்பட்டார். அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது, திருமங்கலத்தைச் சேர்ந்த தோழியின் தாயார் பூங்கோதை என்பவர் பழக்கமானார். அவர், கோவையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை தொடர்ந்து, வீட்டில் சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டார். நாங்களும் கோவையில் இருப்பதாக நம்பினோம். கடந்த, 25ம் தேதி, பூங்கோதை என்னிடம் வந்து, "உன் மகளை ராமநாதபுரத்தில் வைத்துள்ளனர். அவளை மீட்க ஒரு லட்சம் கேட்கின்றனர். அந்த பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம், நீ போய் இவள் என் மகள் என்று கூட்டிக் கொண்டு வந்துவிடு' என, ஒரு புது சேலையும், சாப்பாடும் வாங்கி கொடுத்து, ஆட்டோவில் வைத்து, மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்தார். வரும்போதே போனில், "பெண்ணின் தாயை அனுப்பி வைக்கிறோம், நீங்கள் சிறுமியை மீட்டு வாருங்கள்' என யார்? யாரிடமோ பேசினார். நான், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கியவுடன், சிலர் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விபசார கும்பலால், முன்பு என் மகள் மதுரை வழியாக காரில் அழைத்துச் செல்லும்போது, உறவினர்களை பார்த்து காப்பாற்றும்படி கதறியுள்ளார். ஆனால், அவள் வாயை பொத்தி விட்டனர். மேலும், "எனக்கு பணம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, என் தாய், தந்தை, தம்பியை பார்க்க அனுமதி தாருங்கள்' எனவும் கெஞ்சிய எனது மகளிடம் அந்த கும்பல் இரக்கமே காட்டவில்லை எனக்கூறி கதறி அழுதார்.
மாத்திரை கொடுத்த கொடூரம் : பூங்கோதை கொடுத்த தகவலின்படி, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் புரோக்கர்கள் காத்து நின்றனர். ஆனால், சிறுமியை மீட்க முடியாத நிலையில், தப்பிச் சென்றனர்.
* சிறுமி ஈஸ்வரியை தொடர்ச்சியாக, தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, மாதவிடாய் வராமல் இருக்க, மாத்திரைகளை அதிகமாக கொடுத்துள்ளனர்.
* ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல், ஒரு பெண்ணிடம் ஒரு முறை மட்டுமே தனிமையில் இருப்பார். இதையடுத்து, தன் சகாக்களுக்கு தாரைவார்ப்பது வழக்கம்.
* ராமேஸ்வரத்தில் நேற்று பிடிபட்ட இருவரிடம், பகல் முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறுமி முன் ஆஜர்படுத்தி அடையாளம் காட்ட வைத்தனர். "இவர்கள் இல்லை' என சிறுமி கூறியதை தொடர்ந்து, இருவரையும் நேற்று மாலையில் விடுவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக