வெள்ளி, 29 ஜூலை, 2011

ஹிஸ்புல்லாவின் வீடமைப்புத் திட்டம்.ஈரான் உதவியுடன் ஆரையம்பதி

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் ஆரையம்பதி, காங்கேயனோடை கிராமத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் பிரதமர் டி.எம். ஜயரத்னவினால் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு 170 மில்லியனை ஈரான் இஸ்லாமிய குடியரசு வழங்கியுள்ளது. இக்கிராமத்தில் மொத்தமாக 70 வீடுகளும், பள்ளிவாசல், சுகாதார நிலையம், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வீட்டுத்திட்டத்தினுடைய வீதிகளை அமைப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ், 230 லட்சம் ரூபாயும், உள்ளக வீதிகளை அமைப்பதற்கு சுமார் 200 லட்சம் ரூபாயும், இதற்கான மின் விநியோகத்திற்கு சுமார் 65 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

இவ்வேலைத்திட்டப் பணிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: