28.07.2011 அன்று காலை சேலம் வந்த மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இல்லத்துக்கு வருகை தந்தார்.
திமுக பொதுக்குழு, செயற்குழு நடந்து முடிந்த நிலையிலும், கடந்த சில நாள்களாக வீரபாண்டி ஆறுமுகத்தைச் சுற்றி நிலவிவந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையிலும், மு.க.அழகிரி வீரபாண்டி ஆறுமுகத்தைச் சந்தித்து பேச்சு நடத்துவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள வீரபாண்டி ஆறுமுகம், 28.07.2011 அன்று காவல்நிலையத்தில் முதல் நாள் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது போடப்பட்டுள்ளவை பொய் வழக்குகள் என்றும், அவற்றை முறைப்படி சந்திப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொய் வழக்குகளால் திமுகவை யாரும் அழித்துவிட முடியாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக