The Crown details the charges against Manmeet Singh, who is accused of killing his wife, Ravinder Kaur Bhangu, with an axe and cleaver at a Surrey newspaper office.
Van cooverகனடா நாட்டில் இந்திய பெண் பத்திரிக்கையாரை கொலை செய்த, அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.
கனடா நாட்டின் வான்கூவன் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிந்தர் குர் பாங்கு(24). ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளிவரும் வார இதழ் ஒன்றில் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். கனடா வாழ் இந்தியரான இவரது கணவர் சன்னி பாங்கு(26). கறிக்கடையில் வேலை பார்த்து செய்து வந்தார்.
தம்பதியர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், ரவிந்தர் குர் கணவனைப் பிரிந்து அத்தை மற்றும் நண்பர்களின் வீடுகளில் கடந்த 2-3 மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று வாரஇதழ் அலுவலகத்திற்கு சென்ற சன்னி, அங்கு பணியில் இருந்த மனைவியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது திடீரென சன்னி ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து, மனைவியை சரமாரியாக வெட்டினார்.
இதில் ரவிந்தர் குர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் அல்லது பிரிந்து சென்ற கோபத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சன்னியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக