சனி, 30 ஜூலை, 2011

ஆனந்தசங்கரி: சம்பந்தர் பற்றி விமர்சனங்களைச் செய்ய முற்பட்டால் மக்கள் மிகவும் வேதனையடைவார்கள்

வீ.ஆனந்தசங்கரி

அன்புள்ள சம்பந்தர் ஐயா அவர்கட்கு, ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாறவேண்டுமென தாங்கள் கூறியதாக தலைப்பிட்டு இன்றைய (29.07.2011) தினக்குரலில் கட்டமிடப்பட்ட செய்தியைக் கண்டு

அதிர்ச்சியடைந்தேன். தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலையில் தங்களின் இக்கூற்று அவசியமானதுதானா? என்பது எனது முதலாவது கேள்வி. இது என்னைப் பற்றிய ஒரு விசமத் தனமான விமர்சனம் இல்லையா? என்பது எனது இரண்டாவது கேள்வியாகும்.
"உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்தசங்கரி/சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும்' எனவும் கூறியுள்ளீர்கள். இது ஓர் விசமத்தனமான விமர்சனம் என்றும் இது எம்மக்களின் நலனைப் பாதிக்கும் விடயமாக, உங்களுக்கும் புரியவில்லையா?
சித்தார்தனும் டக்ளஸும் தங்கள் நிலையை வெளிப்படுத்துவார்கள். என்னைப் பொறுத்தவரை இத்தேர்தலில் மட்டுமல்ல, எந்தத் தேர்தலிலும் உண்மைய மட்டுமே கூறிவந்துள்ளேன். நெஞ்சில் நிறைந்துள்ள சுமையை இறக்கி வைத்துவிட்டேன். எவரின் அழைப்புமின்றி நானும் தம்பி சித்தார்த்தனும் எதுவித பலனையும் எவரது கைகளையும் எதிர்பாராது அரப்பணிப்புடன் செயற்பட்டோம். கடந்த ஆறு மாதங்களாகியும் இதுவரை தங்களின் பாராட்டை எதிர்பார்க்காத நிலையில் தங்களின் கருத்து எமக்கும் கூடுதலாக எமது ஆதரவாளர்களுக்கும் வேதனையளிக்கிறது. 
நான் தங்களைப் பற்றிய விமர்சனங்களைச் செய்ய முற்பட்டால் நீங்களல்ல, எம் மக்கள் தான் மிகவும் வேதனையடைவார்கள். என்னுடைய நிலைப்பாடு அன்றும், இன்றும் ஒன்றுதான். மாறுவதற்கு ஒன்றுமில்லை. இப்பேர்ப்பட்ட விமர்சனங்களால் தான் இன்று எம் இனத்திற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். 

கருத்துகள் இல்லை: