சனி, 7 ஆகஸ்ட், 2010

வவுனியா இராணுவ டிரக் விபத்துக்குள்ளாகியுள்ளது15 இராணுவத்தினர் காயம

ஆனையிறவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியொன்று இன்று காலை 9 மணியளவில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் சோதனைச்சாவடியின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளது. வண்டியில் பயணம் செய்த 15 இராணுவத்தினர் காயமடைந்த நிலை யில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிரில் வந்துகொண்டிருந்த பொலிஸ் தண்ணீர்பவுசருக்கு இடம்கொடுக்க முற்பட்டபோது டிரக்வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரிலிருந்த மரத்தில் மோதியதாக தெரியவருகின்றது,

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: