வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பத்மப்ரியா, எனது பலம் நடிப்புதான். அதை மட்டும் பாருங்களேன்

உருகி உருகி காதலிப்பது போன்ற வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது என்று கூறுகிறார் பத்மப்ரியா.

அழகு, நடிப்பு என சகலமும் நிறைந்த நல்ல நடிகை பத்மப்ரியா. ஆனாலும், இவரை தொடர்ந்தார் போல நான்கு படங்களில் கூட பார்க்க முடியாது. ஒரு படம் நடிப்பார். அடுத்து மலையாளத்திற்குப் போய் விடுவார். இல்லாவிட்டால் எங்குமே காண முடியாத நிலை ஏற்படும்.

இருந்தாலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் பத்மப்ரியா. ஆச்சரியமாகத்தான் உள்ளது. நமக்கு மட்டுமல்ல, பத்மப்பிரியாவுக்குமே கூட இது ஆச்சரியமாக உள்ளதாம்.

இத்தனைக்கும் நான் கதைகளை பார்த்து பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். காமாசோமாவென்று நடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. பழசிராஜா, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படங்களில் நடித்த நல்ல மன நிறைவு இருந்தது. இப்படிப்பட்ட படங்களில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

தற்போது பத்மப்ரியாவுக்கு காதல் மோகம் வந்துள்ளதாம். அதாவது காதல் படங்களில் நடிக்கும் மோகம். உருகி உருகி காதலிக்க வேண்டும், நீதான் என் உயிர் என்று காதலனின் காலில் விழுந்து கிடக்கும் காதலியாக நடிக்க வேண்டும். மரங்களைச் சுற்றி வந்து ஆடிப் பாட வேண்டும். இப்படிப்பட்ட ரோல்களில் நிறைய நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி சிரிக்கிறார்.

சரி தமன்னா போட்டியை சமாளிக்க தயாரா என்று கேட்டால், அதெல்லாம் கிடையாது. இன்று தமன்னா முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமில்லையே, நாளை இன்னொருவர் வந்து உட்காரலாம். எனவே யாரும் டாப் என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவரவருக்குரிய படம் அவர்களுக்குக் கிடைக்கும். இதில் போட்டியே கிடையாது என்று டபாய்த்தார்.

கிளாமர் போட்டியையாவது சமாளிக்க ரெடியா என்று கேட்டால், எனது உடல் வாகுக்கெல்லாம் கிளாமர் சரிப்பட்டு வராது சார். இதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் பறிபோயுள்ளன. அதுகுறித்து நானும் கவலைப்படவில்லை. அதேசமயம், கிளாமருக்கு நான் எதிரியும் கிடையாது. பட விழாக்கள், பட புரமோஷன்களுக்கு கிளாமராக நான் வருகிறேனே.

எனது பலம் நடிப்புதான். அதை மட்டும் பாருங்களேன் என்கிறார் சினுங்கியபடி..!

கருத்துகள் இல்லை: