சனி, 7 ஆகஸ்ட், 2010

ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு தமிழ்/ மலையாளத்தில் டைரக்டர் லெனின் ராஜேந்திரன்

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ‘உருமிÕ படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார். இதற்கிடையில் சத்தமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து முடித்திருக்கிறார். புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு ‘மகரு மன்னே என்ற பெயரில் மலையாளத்தில் உருவாகிறது. டைரக்டர் லெனின் ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் ரவிவர்மாவாக நடித்துள்ளார் சந்தோஷ் சிவன். ரவிவர்மா வரைந்த முதல் ஓவியம் தமயந்தி. இந்த கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். ஓவியம் வரைந்து முடித்ததும் அதிலிருந்து வெளிவரும் பூர்ணா, சந்தோஷ் சிவனின் கனவு தேவதையாக நடிக்கிறார். இது பற்றி பூர்ணா கூறும்போது, ‘ஒளிப்பதிவாளராகவே பார்த்துவந்த சந்தோஷ் சிவனை திடீரென ஹீரோவாக பார்த்ததும் ஒரு நிமிடம் ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டேன். நீண்ட வசனங்களை எந்த தடங்கலும் இல்லாமல் அவர் பேசியதை கண்டு வியப்படைந்தேன். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன்என்றார்.

கருத்துகள் இல்லை: