வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

முதலிடத்தில் அழகிரி,அதிகம் தொகுதிக்காக செய்திருப்பவர்களையும்

முதலிடத்தில் அழகிரி:2வது இடத்தில் மீராகுமார்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி நிதியில் இருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை சுட்டிக்காட்டி ஓரு அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
மேலும் அந்த அமைப்பு,எம்.பி.  நிதியில் இருந்து அதிகம் தொகுதிக்காக செய்திருப்பவர்களையும் தெரிவித்துள்ளது.திமுகவைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக செலவிட்டுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, சபாநாயகர் மீரா குமார் 1 கோடியே 19 லட்சமும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் 1 கோடியே 9 லட்சமும், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி 1 கோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 97 லட்சமும் செலவழித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: