செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பிச்சைக்காரியாக சென்னைக்குள் நுழைந்தஜெயலலிதாவே... பொன்முடி

கர்நாடகாவில் இருந்து பிச்சைக்காரியாக சென்னைக்குள் நுழைந்த
 ஜெயலலிதாவே... பொன்முடி ஆவேச பேச்சு

கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொதுக்கூட்டம் கூட்டினார்.  அப்போது திமுகவைப்பற்றியும், திமுக தலைவர் கருணாநிதியைப்பற்றியும் விமர்சித்து பேசினார்.
இந்நிலையில் இன்று கோவையில் அதே இடத்தில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. 
இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி ஆவேசமாக
பேசினார்.
’’ஜெயலலிதாவை பார்த்து கேட்கிறேன்.  கலைஞரை பார்த்து அரசியல் ரீதியாக கேள்வி கேளு.  நாங்கள் பதில் கூறுகிறோம்.  ஆனால் தலைவர் கலைஞரை விமர்சிக்க உனக்கு தகுதியில்லை.
நான் ஏழு வயசிலே எளநி விற்றவள் என்று ஆடிக்கொண்டு  நாட்டியக்காரியாக நாட்டுக்குள்
 நுழைந்த
ஜெயலலிதாவே நாவை அடக்கு.
என் தலைவர் கலைஞர் அவர்களை பார்த்து ஒரு
திமிர் பிடித்தக்காரி ஒருவள் திட்டிவிட்டு சென்றிருக்கிறாள். 

ஹார்லிக்ஸ் பாட்டில் காணவில்லையாம்.  அவற்றை
அழகிரி எடுத்துசென்றுவிட்டார் என்று நாக்கொழுப்பு எடுத்து பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
கோவையில் வந்து பொய் சொல்லிவிட்டு போயிருக்கும் கோமள வள்ளியை கண்டித்து 4ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.அந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.
கலைஞர் ஆட்சி போய்விடும்;  இனி நம்ம கூட்டணிதான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்த கூட்டணி?  யாருடன் எப்போதெல்லாம் கூட்டணி வைத்திருந்தாய் என்பதை இங்கே இருக்கும் முத்துசாமியையும்,சின்னச்சாமியையும் கேட்டால் தெரியும்.
அந்த அலங்காரிக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.  நாவை அடக்கிப்பேசு.  அரசியல் ரீதியாக பேசினால் அரசியல் ரீதியாக பதில் சொல்லத்தயார்.
அதிகாரிகளுக்கு எல்லாம் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.  அந்த தலைவரைப்பார்த்து எப்பொழுதே வந்த பிச்சைக்காரி கேட்கிறார்.
கலைஞரைப்பார்த்து திருட்டு ரயிலில் வந்தாய் என்கிறாய்.  நீ எப்போது வந்தாய்...கர்நாடகத்தில் இருந்து  கிழிந்த பாயுடனும், தகர டப்பாவுடனும் சென்னைக்குள் நுழைந்தாய்.

கர்நாடகத்து நாயே! அடக்கி வை உன் வாயை’’என்று ஆவேசமாக பேசினார்.

இந்த விழாவிற்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார்.   துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மத்திய தொலை
தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, பூங்கோதை,பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: