வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கே. பி. பற்றிய தகவல்களை வெளியிடுவது உகந்ததல்ல சபை முதல்வர் : நிமல்

கே. பி. தொடர்பான விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் கே. பி. பற்றிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுமென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.கடந்த வருடம் பாங்கொக் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்ட எல். ரீ.ரீ.ஈ. தலைவர்களில் ஒருவறான கே. பி. எனப்படும் பத்மநாதன் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு கோரி ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற குழு தலைவர் அநுர குமார திசாநாயக்க கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மிகவும் பாரதூரமான விடயமாகும். கே. பி. பற்றிய விடயங்களை வெளியிடுவதால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையும். நாம் நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்துகி றோம். எனவே, எதிர்காலத்தில் கே.பி. பற்றி சபைக்கு அறிவிப்போம் என்றார்

கருத்துகள் இல்லை: