'பெரும் பொருட்செலவில்...' என்ற பீடிகையுடன் ஒரு படத்தின் தயாரிப்பு பற்றி சொல்லும்போதே, அந்த பெரும் பொருட்செலவில் என்னென்ன சமாச்சாரங்களெல்லாம் அடங்கும் என்று குத்துமதிப்பாக ஒரு யூகத்துக்கு வந்துவிடலாம்.
இதில், பொதுவாக படத்தின் அடிப்படைச் செலவை விட அனாவசிய ஆடம்பரச் செலவுகளுக்கே அதிக இடம் கொடுத்திருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.
அந்த வகையில் உதயநிதி
ஸ்டாலின் ![[^]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vyMVCIHHKyUe9hxxI7FcizGnQC9LUNZIjVrPNfq60PnHPvy4jCIDIiEcTDlWF4wMkixKXad1Xk6fdLI-cC0gYIDWR43A=s0-d)
தயாரிக்க கமல் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல் தங்கியிருந்து அறைக்கான வாடகைக் கட்டணமே ரூ 1.25 கோடி செலுத்தப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு மூன்றரை லட்சமாம்!
கமலுக்கு இந்த ரேஞ்ச் என்றால், த்ரிஷா, அவரது தாயார் தங்கிய அறைக்கான வாடகை, மாதவன், சங்கீதா,
இயக்குநர் ![[^]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vyMVCIHHKyUe9hxxI7FcizGnQC9LUNZIjVrPNfq60PnHPvy4jCIDIiEcTDlWF4wMkixKXad1Xk6fdLI-cC0gYIDWR43A=s0-d)
ரவிக்குமார் தங்கிய அறைகளுக்கான வாடகை, இவர்களின் குழுவினர் 80 பேர் தங்குவதற்கு வாடகை.... இதெல்லாமும்
பட்ஜெட் ![[^]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vyMVCIHHKyUe9hxxI7FcizGnQC9LUNZIjVrPNfq60PnHPvy4jCIDIiEcTDlWF4wMkixKXad1Xk6fdLI-cC0gYIDWR43A=s0-d)
டிலேயே சேருகிறது. கிட்டத்தட்ட 5 கோடியை (படத்தின் பட்ஜெட் ரூ 50 கோடியாம்) விழுங்கியுள்ளது இந்த வாடகைச் செலவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக