சனி, 7 ஆகஸ்ட், 2010

யாழ் சென்றமைக்கு காரணம் கூறுகின்றனர் திருமலை மாணவிகள்

யாழ். பொலிஸ் நிலையத்தில் அவ்விரு மாணவிகளையும் சந்தித்து என்ன நடந்தது என்பது பற்றி கேட்டறிந்தோம். முதலில் தடுமாறிய பிள்ளைகள், பின்னர் எம்முடன் சகஜமாக பேசத் தொடங்கினர்.
"வழமையாக படிப்பு எங்களுக்கு ஏறுவதில்லை. இம்முறை வகுப்பில் 20ஆவது இடத்திற்கு வந்திருந்தோம். வீட்டிற்கு சென்றால் எங்களுடைய பெற்றோர் அடிப்பார்கள் என்பதால் எனது நண்பியுடன் எங்கேயாவது போய்விடலாம் என நடந்து வந்தோம். வழியில் 3000 ரூபாய் பணம் கிடந்தது. அதனை எடுத்துக்கொண்டு வவுனியா பஸ்ஸில் ஏறினோம்.

வவுனியாவில் வந்திறங்கியதும் எமக்கு பயமாக இருந்தது. எனவே மீண்டும் திருகோணமலை செல்லலாம் என நினைக்கின்றபொழுது திருகோணமலை- யாழ்ப்பாணம் பஸ் வந்தது. அது திருகோணமலைக்கு போகிறது என்ற நோக்கத்தில் ஏறி அமர்ந்தோம். இரவாகியதும் பஸ் எங்கோ ஓரிடத்தில் நின்றபொழுது எங்களுக்கு அழுகை அழுகையா வந்திச்சு. எந்த இடம் என்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள்போல் நாங்களும் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து சென்றோம்.
எந்த இடமென்று எங்களுக்கு தெரியவில்லை. இரண்டு பொலிஸார் வந்து எங்களிடம் விசாரித்தார்கள். அப்பொழுதுதான் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பது தெரிந்தது…’"என்று அழுதுகொண்டே அவ்விரு மாணவிகளும் எம்மிடம் கூறினர்.
பிள்ளைகளை கடுமையாக கண்டிக்கும் பெற்றோருக்கு இச்சம்பவம் நல்லதொரு பாடமாக அமைய வேண்டும். பிள்ளைகளுக்கு படிப்பு முடியவில்லை என்றால் அதற்கு தகுந்த வழிமுறையினை கையாள வேண்டும். அதைவிடுத்து பிள்ளைகளுக்கு வதை கொடுத்தால் இப்படியான சம்பவங்களை தடுக்க முடியாது என யாழ்ப்பாணம் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி டபிள்யூ.எஸ்.ஐ.கோணரா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர், சம்பந்தப்பட்ட மாணவிகள் இருவரினதும் பெற்றோர்களை பொலிஸார் எச்சரித்து அவர்களிடம் மேற்படி மாணவிகளை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாகும்?
Pix: Kushan Pathiraja
www.tamil.daillymirror.lk

கருத்துகள் இல்லை: