செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை கண்டித்து காத்தான்குடியில் நகரில் இன்று ஹர்த்தால்!

காத்தான்குடி பள்ளிவாசல்களில் கடந்த 1990ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 20ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.இந்நிலையில், இன்று காத்தான்குடி பிரதேசத்தில் முழுமையான துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தினர்.இந்த தாக்குதல்களின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 325பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: