வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கே.பியின் பன்ஞ் டயலாக,நான் யார் தெரியுமா? நம்பிக்கைதான் வாழ்க்கை –

thanks to :http://www.teavadai.wordpress.com/


நான் யார் தெரியுமா?  நம்பிக்கைதான் வாழ்க்கை – கே.பியின் பன்ஞ் டயலாக்
கே.பி புனர்வாழ்வு பெற்றுவரும் போராளிகளை சந்திக்கின்ற வீடியோ யு ரியூப்பில் தற்போது வலம் வருகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நான் யாரென்று தெரியுமா எனக் கேட்க அவர்கள் தெரியும் எனச் சொல்ல அவர் சிரித்து நிற்கும் காட்சி யூ ரியுப் முழக் தெரிகிறது.
கடந்த வருடம் மே மாதத்திற்கு முன் கே.பி அரசாங்கத்துடன் கைகோக்க வேண்டி வரும் என யாராவது சொல்லி இருந்தால் வெளிநாட்டில் உள்ள விசர்ப்புலி ஒன்று பொங்கியெழுந்து அப்படிச் சொன்னவனை ஒரு வழிபண்ணியிருக்கும்.
ஆனால் காலமாற்றம் நினைத்துப்பார்க்காத பலவிடயங்களை வெகுசாதாரணமாகச் செய்து முடிக்கிறது. புலிகளை யாராலும் வெல்ல முடியாது என தமிழர்கள் நினைத்து இறுமாப்புற்றிருந்தபோது காலம் முள்ளிவாய்க்காலில் அதனை பொய்யாக்கியது. பிரபாகரனின் இடத்தை எவரும் இலகுவில் நெருங்கமுடியாது என புலிவால்கள் புளுகி திரிந்தபோது நந்திக்கடலில பிரபாகரனின் அஸ்தி கரைந்துபோனது. இதெல்லாம் காலம் தமிழர்களுக்கு அவர்களின் இறுமாப்புக்களுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுத்தது.
அரசாங்கத்துடன் கதைப்பவர்களை துரொகிகள் என புலிகள் தூற்றிய காலம் போய் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் இன்று அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இதில் நான் யார் தெரியுமா கே.பி மிக முக்கியமானவர்.
அரசு மிகவும் கவனமாக தனது காரியங்களை நடாத்தி முடிக்கிறது. கல்தோன்றா மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றி தமிழ்இனம் அசடு வழிகிறது. விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனச் சொன்னாலும் தோல்விகளிலிருந்து பாடங்கற்றுக் கொள்+ள நினைக்கவில்லை.
இலங்கை அரசியலில் தமிழ்மக்களின் எவ்வாறு இனிப் பங்கு கொள்ள வேண்டும் சிந்திக்க வேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எவ்வாறு கஜேந்திரன், சிவாஜிலிங்கம், பத்மினி போன்ற கடும் புலிப்போக்காளர்களை கழட்டி விட்டதுபோல் தமிழ்மக்களும் இனி தீவிரவாதம், தமிழ்த்தேசிய வெறி ய+ட்டுபவர்களை கழட்டிவிட வேண்டும்.
தேசிய அரசியலுக்கு வருவதும் தமது உரிமைகளுக்கு சிங்கள முஸ்லீம் முற்போக்கு சக்திகளுடன் கூட்டாக சேர்ந்து போராடுவதுதான் காலம் தற்போது தமிழ்களுக்கு தந்திருக்கும் வழியாகும்.
புலிகளுக்கு ஆயத சப்ளை செய்து இத்தனை அழிவுகளுக்கும் கே.பியும் ஒரு முக்கிய பங்காளியாகும். அவர் அபிவிருத்தி பாதைக்கு இலங்கை அரசுடன் கைகோர்த்திருப்பதை யாரும் தற்போது தவறாக பாடங் கற்பிக்க முடியாது. ஆனால் இந்தப் பாதை நேர்மையாகவும் உளசுத்தியுடனும் செய்து முடிக்கப்பட வேண்டும்.
கே.பி அரசியலுக்கு வருவதை அனுமதிக்கு முடியாது. அவரின் வழி அபிவிருத்தியுடன் நிற்க வேண்டும். அதுபோல்தான் வெளிநாட்டிலிருந்து இலங்கை;கு கே.பியுடன் ஒத்துழைக்கப்போகும் புலிப்பிரமுகர்களுக்கும் இதுதான் நிபந்தனையாகும். அரசியலுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கடந்தகாலங்களில் செய்த தவறுகளுக்கெல்லாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட தமிழர்களுக்கு அன்னை திரேசாபோல் காலம் ப+ராகவும் தொண்டு செய்ய வேண்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. கே.பி அவர்களே நம்பிக்கையோடு மக்களை அணுகுங்கள். ஆனால் அரசியல் உங்களுக்கு இனி அந்நியமானதாக இருக்க வேண்டும்.  கடந்தகால பாவங்கள் காலத்தால் கரைந்து போகக்கூடியவை.

கருத்துகள் இல்லை: